Thursday, May 31, 2007

ஹெல்மெட் போடுங்க மக்களே!

ஜு ன் 1 முதல் தலைக்கவசம் அணிவது சென்னை முதலான மாநகாரட்சிகளில் கட்டாயமாக்க பட்டுள்ளது... மிகவும் வரவேற்க்க படவேண்டிய சட்டம் அனைவராலும் சலிப்புடன் பேசப்படுகிறது. என்னை பொருத்தவரை நான் எப்பொழுதுமே தலை கவசம் அணிபவன், அதனால் இந்த சட்டதை நான் வரவேற்ப்பதில் வியப்பு ஏதும் இல்லை...ஆணால் நமது சென்னை மாநகர மக்கள் இதை அவ்வளவாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிற மாதிரி தெரியவில்லை.


மக்கள் புது புது நடை முறை சிக்கல்களை கண்டுபிடித்து குறை கூறுகிறார்கள். நமது மக்களின் மனம் இந்த தலை கவச சட்டதை நமக்காக தான் என்று எப்பொழுது உணருகிறதோ அப்பொழுது தான் இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கூறுவது போல், மக்கள் இது நமக்காக தான் என்று உணரும் போது தான் அரசின் எந்த திட்டமும் மக்களை போய் சேரும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இதில் படித்தவர், பாமரர் என்ற எந்த வித்தியாசமும் விதியை மீறுவதில் கிடையாது



அரசாங்கம், தலைக்கவசம் அணிவதை ஊக்குவிக்க வேண்டும், தலை கவசத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் சட்டப்படி இரண்டு சக்கிர வாகனம் வாங்கும் போது, அதன் விலையில் தலைக்கவசமும் வழங்க படவேண்டும். அரசு அந்த சட்டத்தை நடைமுறை படுத்த முயற்ச்சி எடுக்க வேண்டும். தலை கவச சட்டத்தை மக்கள் புரிந்து கொள்ள தவறினால் அது வெறும் சடங்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.